ஓட்டுபோடும் உரிமை உள்ளவர்கள் முதல்-அமைச்சர் ஆகலாம்: பிரேமலதா

ஓட்டுபோடும் உரிமை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் முதல்-அமைச்சர் ஆகலாம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், பட்டியலினத்தை சேர்ந்த ஒருவர் எந்த சூழலிலும் எந்த மாநிலத்திலும் முதல்-அமைச்சராக வர முடியாது என வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், “2026 சட்டமன்ற தேர்தலுக்காக தே.மு.தி.க. தயாராகி வருகிறது. தே.மு.தி.க. எப்போதும் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி ஆகும். ஓட்டுபோடும் உரிமை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் முதல்-அமைச்சர் ஆகலாம். ஆனால் அவர்களை தேர்ந்தெடுக்க வேண்டியவர்கள் மக்கள்தான்” என்று தெரிவித்தார்.