கல்வித்திறனுக்கும் வேலைவாய்ப்புக்கான தேவைப்படும் திறனுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது: பிடிஆர்

தேசிய அளவிலான தரவரிசையில் பல சிறந்த கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருந்தாலும், வேலைவாய்ப்புகள் பெறும் வகையில் அவை பட்டதாரிகளை உருவாக்கவில்லை.. இதற்கு முக்கிய காரணம் கல்லூரிகளில் மாணவர்கள் பெறும் கல்வித்திறனுக்கும் வேலைவாய்ப்புக்கான தேவைப்படும் திறனுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது. அதை முதலில் சரி செய்ய வேண்டும் என்று அமைச்சர் படிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

கோவை- அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் (ICT) 57வது பதிப்பு மாநாடு நேற்று ஆகஸ்ட் 20ம் தேதி (செவ்வாய்கிழமை) நடைபெற்றது. மெகா தொழில் நிறுவனத் தொடர்பு நிகழ்வாக இந்த மாநாடு நடைபெற்றது. மேலும் இந்த மாநாடு தமிழ்நாடு தி குளோபல் ஸ்கில் கேப்பிட்டல் என்ற கருப்பொருளில் நடந்து முடிந்தத. இந்நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இந்த மாநாடு தமிழ்நாட்டை உலகளாவிய மையமாக மாற்றுவதற்கான பாடத்திட்டத்தைப் பட்டியலிடும் நோக்கத்துடன் கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் கல்வியாளர்களின் ஒருங்கிணைப்பாக நடந்தது. இதில் பல்வேறு கல்வி நிறுவனங்களை சார்ந்த தலைவர்கள், நிர்வாகிகள், தொழில்துறை தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியல் ஐடி துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:-

தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் (ICT) 57வது பதிப்பு மாநாடு, மிகவும் சிறப்புமிக்க மாநாடு.. இந்த மாநாட்டின் கருப்பொருள் முதலமைச்சரின் அறிக்கையை எதிரொலிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஏற்கனவே அனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தேசிய அளவிலான தரவரிசையில் பல சிறந்த கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருந்தாலும், வேலைவாய்ப்புகள் பெறும் வகையில் அவை பட்டதாரிகளை உருவாக்கவில்லை.. இதற்கு முக்கிய காரணம் கல்லூரிகளில் மாணவர்கள் பெறும் கல்வித்திறனுக்கும் வேலைவாய்ப்புக்கான தேவைப்படும் திறனுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது. அதை முதலில் சரி செய்ய வேண்டும். தேசிய தரவரிசையில் பல்வேறு கல்லூரிகள் இருப்பினும், இங்குள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு போதுமானதாக உருவாக்கப்படவில்லை என்பதால் , தமிழ்நாட்டிலும், உலகச் சந்தைகளிலும் முழுத் திறனையும் தமிழகத்தால் அடைய முடியவில்லை. இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

இப்போதுதான் தேசிய அளவிலான தரவரிசையில் பல சிறந்த கல்லூரிகள் தமிழ்நாட்டில் சிறந்த கல்வி நிறுவனங்கள் உள்ளதாக மத்திய அரசே பாராட்டி உள்ள நிலையில், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இந்த பேச்சு திமுகவினரிடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.