ஒரே சூப்பர் ஸ்டார், ஒரே தலைவர்: துஷாரா விஜயன்!

நடிகை துஷாரா வேட்டையன் படம் பார்த்த விடியோவை வெளியிட்டு, “ஒரே சூப்பர் ஸ்டார், ஒரே தலைவர்” என்று கூறியுள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். பின்னர் நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்கன், அநீதி படங்களில் நடித்திருக்கிறார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் துஷாரா விஜயன் நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

த.செ. ஞானவேல் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படம் இன்று (அக்.10) வெளியானது. வேட்டையன் படத்தில் துஷாரா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை துஷாரா படம் பார்த்த விடியோவை வெளியிட்டு, “ஒரே சூப்பர் ஸ்டார், ஒரே தலைவர். eன்னுடைய வாழ்க்கையின் முக்கியமான நாள். எப்போதும் இந்நாளுக்கு நன்றியுடனிருப்பேன். வேட்டையன் திரையங்குகளில் வெளியானது” எனப் பதிவிட்டுள்ளார்.