செந்தில் பாலாஜியால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?: உச்சநீதிமன்றம் கேள்வி!

வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள், போக்குவரத்து துறை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களில் உள்ள சாட்சியங்கள் குறித்த விவரங்களை ஜனவரி 15ஆம் தேதிக்குள் தர உத்தரவிட்டுள்ளனர்.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக எழுந்த புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார். அமைச்சராக பொறுப்பேற்று உள்ள செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளரை பதில் மனுதாரராக அளித்து பதில் தர உத்தரவிட்டு உள்ளது.

அமலாக்கத்துறை வழக்கறிஞர் சொலுசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முன் வைத்த வாதத்தில், ”செந்தில் பாலாஜி சிறையில் இருந்த போது சக்திவாய்ந்த நபராக இருந்தார். தற்போது அவர் அமைச்சராகி உள்ளதால் வழக்கில் தாக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது” என தெரிவித்தார்.

வாதங்களை கேட்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள், போக்குவரத்து துறை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களில் உள்ள சாட்சியங்கள் குறித்த விவரங்களை ஜனவரி 15ஆம் தேதிக்குள் தர உத்தரவிட்டு உள்ளனர்.