நிதிச்சுமை காரணமாக இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தமிழக நிதிஅமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் நிதிஅமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-
பொங்கல் தொகுப்புடன் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படும். நடப்பாண்டில் பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதில், நிதிச்சுமை காரணமாக கடினமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், பொங்கல் தொகுப்பு பொருட்களுக்கான நிதியை முதல்வர் வழங்கியுள்ளார். வரும் காலங்களில் நிதி நிலைமையை சீராக்கும் நடவடிக்கை மூலம் நல்ல சூழ்நிலை உருவாகும் என நம்புகிறேன்.
மகளிர் உரிமைத்தொகை பெற்றுவரும் மகளிருக்கு பொதுவாக ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி வங்கிக் கணக்கில் ரூ.1,000 வழங்கப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த முறை முன்கூட்டியே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.