ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானில் உள்ள கியூஷு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.6ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாகச் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள கியூஷு பகுதியில் இன்று திங்கள்கிழமை 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 37 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், பொதுமக்கள் சாலைகளுக்கு ஓடி வந்தனர். மேலும், இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள தென்கிழக்கு கடலோர பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.