இந்தியா நடத்திய பாக். விமான படையின் 20% உள்கட்டமைப்புகள் சேதம்!

பாகிஸ்​தான் மீது நடத்​திய ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலில் அந்​நாட்டு விமானப் படை​யின் 20 சதவீத உள்​கட்​டமைப்​பு​கள், போர் விமானங்​கள் நாசமடைந்​துள்​ளன. அத்​துடன் பாகிஸ்​தான் ராணுவ அதி​காரி​கள் உட்பட 50 பேர் உயி​ரிழந்​தது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.

கடந்த மாதம் 22-ம் தேதி காஷ்மீரின் பகல்​காமில் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர். அதற்கு பதிலடி கொடுக்க இந்​தியா ஆபரேஷன் சிந்​தூர் என்ற பெயரில் தாக்​குதல் நடத்​தி​யது. இதில் கடந்த 10-ம் தேதி இந்​தியா நடத்​திய தாக்​குதலில் பாகிஸ்​தான் விமானப் படை, ராணுவத்​துக்கு பேரிழப்பு ஏற்​பட்​டுள்​ளது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.

எல்​லைக் கட்​டுப்​பாட்டு கோட்​டருகே இந்​தியா நடத்​திய தாக்​குதலில் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​களின் பல்​வேறு பதுங்கு குழிகள், சுரங்​கங்​கள் அழிக்​கப்​பட்​டுள்​ளன. அத்​துடன் பாகிஸ்​தான் ராணுவத்​தின் பல தளங்​களை இந்​தியா தாக்​குதல் நடத்தி அழித்​துள்​ளது. சுமார் 12-க்​கும் மேற்​பட்ட பாகிஸ்​தான் ராணுவ தளங்​கள் மீது இந்​தியா தாக்​குதல் நடத்தி உள்​ளது.

இதுகுறித்து பாது​காப்​புத் துறை வட்​டாரங்​கள் நேற்​று​முன்​தினம் கூறிய​தாவது:-

இந்​திய ராணுவ தளங்​கள், பொது​மக்​கள் வாழும் இடங்​களை குறி வைத்து பாகிஸ்​தான் தாக்​குதல் நடத்​தி​யது. அவற்றை இந்​திய ஏவு​கணை​களும், ட்ரோன்​களும் முறியடித்​தன. அதற்கு பதிலடி​யாக​ பாகிஸ்​தானின் சர்​கோதா மற்​றும் போலாரி விமானப் படை தளங்​களில் இந்​தியா கடும் தாக்​குதல் நடத்​தி​யது. அங்​குள்ள வெடிபொருள் கிடங்கு மீதும் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. அந்த பகு​தி​களில்​தான் பாகிஸ்​தானின் எப்​-16, ஜே-17 போன்ற போர் விமானங்​கள் நிறுத்தி வைக்​கப்​பட்​டிருந்​தன. இந்த தாக்​குதலில் பாகிஸ்​தான் விமானப் படை அதி​காரி உஸ்​மான் யூசுப் மற்​றும் விமானப் படை​யின் 4 வீரர்​கள் உட்பட 50 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். அத்​துடன் பல போர் விமானங்​கள் நொறுங்கி உள்​ளன.

நூர் கான், ரபிகியூ, முரித், சுக்​குர், சியால்​கோட், பஸ்​ருர், சுனியன், சர்​கோ​தா, ஸ்கர்​தூ, பலோரி, ஜகோ​பா​பாத் போன்ற பாகிஸ்​தானின் ராணுவ தளங்​கள் சேதம் அடைந்​தன. இந்​தி​யா​வின் ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலுக்கு முன்​பும், தாக்​குதலுக்​குப் பின்​பும் எடுக்​கப்​பட்ட சேட்​டிலைட் படங்​கள் அதை உறு​திப்​படுத்தி உள்​ளன.

முன்​ன​தாக இந்​திய தாக்​குதலில் நொறுங்கி போன பாகிஸ்​தானின் விமானப் படை தளங்​கள் தொடர்​பான வீடியோவை கடந்த திங்​கட்​கிழமை இந்​திய வி​மானப் படை வெளி​யிட்​டது. அதே​போல் பாகிஸ்​தான் ஏவிய ட்ரோன்​கள்​, ஏவு​கணை​களை நடு​வானிலேயே சுட்​டு வீழ்த்​தி​ய வீடியோவும்​ வெளியிடப்​பட்​டது.