தினம் தினம் ஒரு படத்துக்கு அப்டேட் தருவது சாத்தியம் கிடையாது. அப்டேட் கேட்காதீர்கள், அழுத்தம் ஏற்படுகிறது என ரசிகர்களிடம் ஜூனியர் என்டிஆர் வேண்டுகோள் விடுத்தார்.
முன்னணி ஹீரோக்கள் ஒரு படத்தின் படப்பிடிப்பை துவங்கியதும், அந்த படத்துக்கான அப்டேட் கேட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரோல் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தெலுங்கு பட விழா ஒன்றில் ஜூனியர் என்டிஆர் கலந்துகொண்டு பேசியதாவது:-
ஒரு படம் தொடங்கியதும் அப்டேட் கேட்காதீர்கள். தினம் தினம் ஒரு படத்துக்கு அப்டேட் தருவது சாத்தியம் கிடையாது. அப்டேட் கேட்டு ட்ரோல் செய்வதால் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் சம்பந்தப்பட்ட ஹீரோவுக்கும் அழுத்தம் ஏற்படுகிறது. வேலையில் கவனம் செலுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. அப்படி அப்டேட் கொடுத்தால், அது உங்களுக்கு பிடிக்காவிட்டால் ட்ரோல் செய்கிறீர்கள். அதுவும் எங்களுக்கு அழுத்தம் தருகிறது. ஒரு படத்தை பற்றிய தகவலை நாங்கள் எங்கள் மனைவிகளிடம் கூட ஷேர் செய்வதில்லை. முதலாவதாக உங்களிடம் (ரசிகர்களிடம்) தான் சொல்கிறோம். அதனால் பொறுமையை கடைபிடியுங்கள். இவ்வாறு ஜூனியர் என்டிஆர் கூறினார்.