நயன்தாரா தனது மகன்களுக்கு வித்தியாசமாக பெயர் வைத்துள்ளார்!

நடிகை நயன்தாரா தனது மகன்களுக்கு வித்தியாசமாக பெயர் வைத்துள்ளார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது, விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது. கடந்த 6 ஆண்டுக்கும் மேலாக அனைவருக்கும் பிடித்த ஜோடியாக இருவரும் வலம் வந்து கொண்டிருந்த இந்த ஜோடி ஜூன் 9ந் தேதி அனைவரும் வியந்து பார்த்து அளவுக்கு 20க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் மந்திரம் ஓத தடபுடலாக திருமணம் நடந்து முடிந்தது. ஜூன் மாதம் திருமணம் ஆனநிலையில் அக்டோபர் மாதம் வாடகைத்தாய் முறையில் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோராக இந்த தம்பதி மாறினர். இந்த விவகாரம் பல சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், ஜூன் மாதத்திற்கு முன்னதாகவே ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துக் கொண்டதாக விளக்கம் அளித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் தங்களது இரட்டை ஆண் குழந்தைக்கு உயிர், உலகம் என பெயர் வைத்திருந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் தனது மகன்களுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக தெய்வேக் N சிவன் என பெயர் வைத்துள்ளதாக கூறியுள்ளார். இந்த கேள்விப்பட்ட ரசிகர்கள் அட வித்தியாசமான பெயரா இருக்கே என்று கூறிவருகின்றனர்.