லாரன்ஸ் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு பெற முத்தம் கொடுத்து காண்பிக்க வேண்டும் என சீரியல் நடிகை பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அற்புதம் படத்தின் ஹீரோவாக அறிமுகமானார் லாரன்ஸ். இயக்கத்தில் மாஸ் காட்டிய லாரன்ஸ் நடன அமைப்பாளர், நடிகராக வலம் வந்துகொண்டிருந்த லாரன்ஸ் 2004ஆம் ஆண்டு மாஸ் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கில் ஸ்டைல், டான் ரெபெல் உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர் தமிழில் முனி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.அப்படத்தில் ராஜ்கிரண், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தமிழில் அவர் இயக்குநராக அறிமுகமானாலும் மெகா ஹிட் அவருக்கு கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட சூழலில்தான் கடந்த 2011ஆம் ஆண்டு காஞ்சனா படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனையடுத்து காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய படங்களை இயக்கினார். இவற்றில் காஞ்சனா தவிர மற்ற படங்கள் சுமாரான வரவேற்பையே பெற்றது. காஞ்சனா ஏற்படுத்திய டிமாண்டால் அந்தப் படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்தார் அவர். ராகவா லாரன்ஸ் பலருக்கு உதவி செய்திருக்கிறார். அவர் நல்லது செய்தாலும் ஒருசில விஷயங்களில் சர்ச்சைகளை சம்பாதித்திருக்கிறார். அதாவது சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவின் ஹீரோ விஷால், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் என யாரையும் விட்டுவைக்காமல் நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் அளித்தார். அதில் ராகவா லாரன்ஸும் ஒருவர்.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மீது புதிய சர்ச்சை எழுந்திருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை தீபிகா அளித்த சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது:-
ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக அறிந்து ஆடிஷனில் கலந்துகொண்டேன். அப்போது இருந்த ஒரு ஆள், ‘இந்தப் படத்தில் முத்தக்காட்சிகள் அதிகம் இருக்கின்றன. எனவே முத்தம் கொடுத்து காட்ட வேண்டும்’ என்றார். ஆனால் அப்படி என்னால் நடிக்க முடியாது. வேறு காட்சிகள் இருந்தால் சொல்லுங்கள் நடிக்கிறேன் என்றேன். அதற்கு அவர் இப்போதுதான் சுமார் 8 பெண்கள் இப்படி நடித்துவிட்டு சென்றிருக்கிறார்கள். எனவே உங்களுக்கு மட்டும் தனியாக ஒரு காட்சி கொடுக்க முடியாது என கூறினார். ஆனால் அதற்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன். இவ்வாறு தீபிகா கூறியுள்ளார்.