நடிகை நயன்தாராவின் 75வது படத்தில் இணைந்த ஜெய்!

நடிகை நயன்தாராவின் 75வது படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு போடப்பட்டு தற்போது சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி வருகிறார். படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக நடிகர் ஜெய் இணைந்துள்ளார்.

நயன்தாராவின் 75வது படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூஜை போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் நயன்தாராவிற்கு ஜெய் ஜோடியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெய்யின் பிறந்தநாளையொட்டி, நயன்தாராவுடனான அவரது கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போஸ்டருடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் #HappyBirthdayJai என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகியுள்ளது.

முன்னதாக இந்த ஜோடி அட்லியின் ராஜா ராணி படத்தில் இணைந்து நடித்திருந்தது. இந்நிலையில் இரண்டாவது முறையாக இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது குறித்து ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். விரைவில் படத்தின் டைட்டிலை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.