இயக்குனர் லிங்குசாமி மக்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் அறிவுமதியை நேரில் சந்தித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் ‘ஆனந்தம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. அதன்பிறகு ரன், ஜி, சண்டக்கோழி போன்ற பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். கடைசியாக லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 மற்றும் தி வாரியர் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார்.
தற்போது லிங்குசாமி கடந்த 2010-ஆம் ஆண்டு கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பையா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இயக்குனர் லிங்குசாமி மக்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் அறிவுமதியை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
