இறைவன் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது!

ஜெயம் ரவி- நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் ‘இறைவன்’. இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது!

‘வாமனன், ‘என்னென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹமத். இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இறைவன்’. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், ‘இறைவன்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ‘தப்பு பண்ணும் போது ஆண்டவன் பாத்துப்பானு விட்டுபோற அளவுக்கு பொறும இல்ல’ போன்ற வசனங்களுடன் த்ரில்லர் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், ‘இறைவன்’ டிரைலர் ஒரே நாளில் 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. ‘இறைவன்’ திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இயக்குனர் அஹமத் கூறும்போது “இது மர்டர் மிஸ்ட்ரி சைக்கோ த்ரில்லர் கதை. இதற்கு முன் இந்த சாயலில் பல படங்கள் வந்திருந்தாலும் புதிதாக ஒரு கதையை இதில் சொல்ல முயற்சித்திருக்கிறேன். ஜெயம்ரவி இதற்கு முன் பல படங்களில் போலீசாக நடித்திருந்தாலும் இதில் அவர் முற்றிலும் வேற மாதிரியான போலீஸ். நாயகனுக்கு நிகரான கேரக்டர் வில்லன் ராகுல் போசுக்கு. இத்தனை கொடூரமான வில்லனை இதற்கு முன் பார்த்தில்லை என்கிற அளவிற்கு அவரது நடிப்பு இருக்கும். நயன்தாரா கேரக்டர் பற்றி விரிவாக இப்போது சொல்ல முடியாது. படம் வந்ததும் அனைவரையும் அவரது கேரக்டர் ஆச்சர்யப்படுத்தும்” என்றார்.