மகளை இழந்து பரிதவித்து வரும் விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூற வந்த பார்த்திபன் வாழ்க்கை ஒரே ஒரு முறைதான் அதை அழகாக வாழ குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள் என்று கண்கலங்கி பேசினார்.
நடிகராகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா நேற்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த ஓர் ஆண்டாகவே மன அழுத்தத்தால், பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவருடைய மீராவிற்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்துவந்துள்ளனர். 16 வயதே ஆகும் மீரா தற்போது சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பில் திறமையான பெண் என்றும், அவர் பள்ளியில் மன அழுத்தத்துடன் இல்லை அவர் இயல்பாகவே இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை சென்னி கீழ்ப்பாக்கத்தில் மீராவின் இறுதி சடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கல்லறையில் இடம் கிடைக்காத காரணத்தால், இன்று காலை 8 மணி முதல் 11 மணிக்குள் மீராவின் இறுதி சடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தளபதி விஜய் அவர்களின் தாய் சோபா, முன்னணி இயக்குனர் பார்த்திபன், நடிகர் சித்தார்த் நடிகர், மூத்த நடிகர் பிரபுதேவா உள்ளிட்ட பலரும் விஜய் ஆண்டனியின் இல்லத்திற்கு நேரடியாக வந்து அவருக்கு ஆறுதல் கூறி சென்றுள்ளனர். இறந்த மீராவின், பள்ளி ஆசிரியர்களும் கண்ணீர் மல்க நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மீராவிற்கு அஞ்சலி செலுத்த வந்த பார்த்திபன் கூறுகையில், பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்து, ஆசிரியர்கள் மாணவர்களை கண்காணிக்க வேண்டும், ஏன் என்றால் குழந்தைகள் பெற்றோர்களைவிட பள்ளியில் தான் அதிக நேரம் இருக்கிறார்கள். பள்ளியில் நல்ல தைரியமான பெண்ணாக இருந்த மீரா, மனதிற்குள் என்ன கஷ்டத்தை அனுபவித்தார் என்று தெரியவில்லை. விஜய் ஆண்டனி மிகவும் மென்மையானவர், எந்த பிரச்சனை இருந்தாலும் அவரிடம் சொல்லி இருக்கலாம். இனி மேல் இதுபோன்று எதுவும் நடக்காமல் இருக்க பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தைரியத்தை கொடுக்கணும், எந்த பிரச்சனை இருந்தாலும் தூக்கிப்போடு, இந்த வாழ்க்கை ஒரு தடவைதான் அதை சந்தோஷமா வாழ்வதற்கு சொல்லி கொடுக்க வேண்டும் என்று கண் கலங்கியபடி பேசினார்.