‘புஷ்பா’ நடிகர் ஜெகதீஷ் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் ஜாமீனில் இருப்பார்: சின்மயி!

‘புஷ்பா’ பட நடிகர் ஜெகதீஷ் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் ஜாமீனில் இருப்பார் என்று பாடகி சின்மயி கூறியுள்ளார்.

அண்மையில் தெலுங்கு துணை நடிகை ஒருவர், புஷ்பா படத்தில் நடித்து பிரபலமான ஜெகதீஷ் பிரதாப் பந்தாரியால் பாலியல் தொல்லைக்கு உட்பட்டு தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து, ஜெகதீஷ் கைதானார். ஆனால், இதை தெலுங்கு சினிமாக்காரர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் அப்பெண்ணுக்கு நியாயம் கேட்கும் வகையில் சின்மயி தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார். இந்த வழக்கு குறித்து சின்மயி கூறியுள்ளதாவது:-

நாட்டில் பாலியல் துன்புறுத்தல் தீர்வுக் குழுவைக் கொண்ட முதல் திரைப்பட அமைப்புகளில் தெலுங்கு ஃபிலிம் சேம்பர் ஒன்றாகும். அந்தப் பெண் தனது உரிமைகளை அறிந்திருந்தால், அவளுக்கு சட்ட உதவி கிடைத்திருக்கும். அவள் பயப்பட்டு இருக்கமாட்டார். அவள் பாதுகாப்பாக உணர்ந்திருப்பாள். இன்று மற்றொரு இளம் பெண் இறந்துவிட்டார். ஏனென்றால் ஒரு ஆண் தன்னை பிளாக்மெயில் செய்வது எளிது என்று நினைப்பு உள்ளது. ஏனென்றால் ஒரு பெண்ணின் மரியாதை அவளுடைய உடலில் உள்ளது என்று நம் சமூகம் சொல்கிறது. அது எப்படி இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். இந்த வழக்கில் தீர்ப்பு கிடைக்க பல ஆண்டுகள் பிடிக்கும்.குர்மீத் ராம் ரஹீம் போல் தண்டனை பெற்றாலும் ஜெகதீஷும் ஜாமீனில் தான் இருப்பார். அவ்வளவு தான். வெண்மை சட்டைக்காரர், ஜெகதீஷ். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.