4 கோடிக்கு சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா!

கன்னட சினிமாவில் நடித்து அறிமுகமாகி தற்போது தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் அனிமல் படத்திற்கு பிறகு தனது சம்பளத்தை 4 கோடியாக அதிகரித்துவிட்டாராம்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. 2016ல் கிரிக் பார்ட்டி என்கிற கன்னட படத்தில் நடித்து கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து இரண்டு மூன்று கன்னட படத்தில் நடித்த பிறகு 2018ல் இயக்குனர் வெங்கி கொடுமுலா இயக்கத்தில் வெளியான சலோ படத்தல் கதாநாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். சலோ படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீதா கோவிந்தம் படத்தில் நடித்து இந்தியளவில் பிரபலமானார். கீதா கோவிந்தம் திரைப்படம் நடிகை ராஷ்மிகாவின் சினிமா கெரியரில் மிகப்பெரிய ஏற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதனை தொடர்ந்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்த இவர் 2021-ல் வெளியான சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

என்னதான் சுல்தான் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நேரடியாக அறிமுகமாகி இருந்தாலும் இவரது முந்தைய தெலுங்கு மற்றும் கன்னட படங்கள் மூலமாகவே தமிழ் மக்கள் மத்தியில் ஓரளவு பிரபலமாக இருந்தார் ராஷ்மிகா. சுல்தான் படத்தை தொடர்ந்து 2023ல் வெளியான வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் ராஷ்மிகா.

தெலுங்கு, தமிழ், கன்னடா மட்டுமில்லாமல் 2022ல் குட்பாய் படத்தில் நடித்து பாலிவுட் சினிமாவிலும் அறிமுகமானார். குட்பாய் படத்தை தொடர்ந்து மிஷன் மஜ்னு என்கிற பாலிவுட் படத்தில் நடித்திருந்தார். எனினும், இந்த இரண்டு படங்களும் பாலிவுடில் ராஷ்மிகாவிற்கு பெரிய ஓபனிங் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த அனிமல் திரைப்படம் கடந்தாண்டு இறுதியில் வெளியானது. இந்த படம் ராஸ்மிகாவிற்கு ஹிந்தி சினிமாவில் நல்ல ஓபனிங் ஏற்படுத்திக் கொடுத்தது. என்னதான் விமர்சன ரீதியாக மக்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியை பெற்று இருந்தாலும், வசூலை வாரி குவித்தது அனிமல் திரைப்படம்.

அனிமல் திரைப்படத்தின் மூலமாக ராஷ்மிகாவுக்கு கிடைத்த ஆதரவினால் தனது சம்பளத்தை 4 முதல் 4.5 கோடி வரை உயர்த்தி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் எழுந்து வந்தது. தனது சம்பளத்தை நான்கு கோடிக்கு உயர்ந்து விட்டாரா ராஷ்மிகா என செய்திகளும் வெளியாக, இதனை கவனித்த ராஷ்மிகா இந்த வதந்திக்கு மூற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவரது டுவிட்டரில் பதிலளித்து இருக்கிறார்.

இது குறித்த பதிவில், இதை அனைத்தையும் பார்க்கும்போது சம்பளம் குறித்து யோசிக்க வேண்டி இருக்கிறது.. ஒருவேலை என்னுடைய தயாரிப்பாளர்கள் இது குறித்து கேட்டால், இதோ பாருங்கள் மீடியாவே இதனை சொல்லி இருக்கிறது என இதை காட்டுவேன்.. ஏனென்றால் நீங்கள் சொல்லும் விஷயத்தைநான் செய்தாக வேண்டுமே.. சொல்லுங்கள் ? என பதிவிட்டு இருக்கிறார்.

ராஷ்மிகாவின் வைரல் பதிவு 4.5 கோடி ரூபாய்க்கு சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார் ரஷ்மிகா என்கிற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ராஷ்மிகாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆக, அனிமல் படத்தின் மூலம் ராஷ்மிகா சம்பளத்தை உயர்த்தவில்லை என்பதே அவரது பதிவு கூறும் செய்தியாக உள்ளது. நடிகை ராஷ்மிகா தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் ரெயின்போ, தி கேர்ள்பிரண்ட், சாவா ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.