புதிய அவதாரத்தை எடுத்திருக்கிறார் சனம் ஷெட்டி!

நடிகையாகவும் மாடலாகவும் இருந்து வருகிறார் சனம் ஷெட்டி. பிக் பாஸ் 4ல் போட்டியாளராக கலந்துகொண்ட இவர் நடந்து முடிந்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சிக்கு விமர்சனம் கொடுத்து பேசுபொருளானார். நடிகை, மாடல், விமர்சகர் என்கிற அடையாளத்தை கடந்து இப்போது சூப்பரான அவதாரத்தை எடுத்திருக்கிறார் சனம்.

நடிகையாகவும் மாடலாகவும் பணியாற்றி வருகிறார் சனம் செட்டி. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் இவர் நடித்து வருகிறார். பெங்களூருவை சொந்த ஊராகக் கொண்ட இவர், தற்போது சென்னையில் செட்டிலாகி இருக்கிறார். தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கக்கூடிய இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். 2012 அம்புலி படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2020ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட இவருக்கு அந்த நிகழ்ச்சியின் மூலம் எக்கச்சக்கமான ரசிகர்கள் உருவானார்கள்.

விளம்பர படங்கள், திரைப்படங்கள், சமூக வலைத்தள விளம்பரங்கள் என படு பிஸியாக இருக்கும் சனம் செட்டி நடந்துமுடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனுக்கு விமர்சனம் கொடுத்து சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் பேசு பொருளானார். அனைத்து வித நிகழ்வுகளுக்கும் அவரது கருத்தை சமூக வலைத்தளங்களில் பதிவுகள் போட்டு அவரது கருத்துக்களை பதிவிட்டு வரும் சனம் செட்டிக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

நடிகையாகவும் மாடலாக மட்டுமே தனது கெரியரை சுருக்கிவிடாமல் தற்போது மிகப்பெரிய முன்னெடுப்பை எடுத்திருக்கிறார். கிளைம் கல்ச்சர் புரடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தை உருவாக்கி, இதன் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார் நடிகை சனம் செட்டி. சனம் செட்டி அவரது தொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தற்போதைக்கு யூடியூப் தளத்திற்கான இசை ஆல்பம் மற்றும் குறும்படங்களை தயாரிக்கவிருக்கிறாராம். மேலும் அடுத்தடுத்த காலங்களில் மற்ற கலை சார்ந்த விஷயங்களையும் தயாரிக்கவிருக்கிறாராம் சனம் செட்டி.

இது குறித்த அறிவிப்பை அவரது க்யூட் வீடியோவுடன் பதிவிட்டு இருக்கிறார் சனம். மேலும் இது அனைத்தும் மக்கள் கொடுத்த அன்பு மற்றும் ஆதரவினால்தான் நடந்தது என்றும் நன்றி என்றும் பதிவிட்டு இருக்கிறார். தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் சனம் ஷெட்டிக்கு பலரும் அவர்களது வாழ்த்துக்களை கமெண்ட்டுகளில் குவித்து வருகிறார்கள்.