‘வேட்டையன்’ படப்பிடிப்பு 80% நிறைவடைந்துள்ளது: ரஜினிகாந்த்

‘வேட்டையன்’ படப்பிடிப்பு 80% நிறைவடைந்துள்ளது. இன்னும் 20 % மீதமுள்ளது. அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது:-

லால் சலாம் படம் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் பிடித்துள்ளதாக கேள்விப்பட்டேன். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. படத்தை தயாரித்த லைகா புரடெக்‌ஷனுக்கும், படக்குழுவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். ‘வேட்டையன்’ படப்பிடிப்பு 80% நிறைவடைந்துள்ளது. இன்னும் 20 % மீதமுள்ளது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கவுள்ளேன்” என்றார்.

விஜய், விஷால் அரசியல் வருகை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு ‘அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம்’ என்றார்.