‘சப்தம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது!

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சப்தம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

ஈரம், வல்லினம், குற்றம் 23 திரைப்படங்களை இயக்கிய அறிவழகன் சப்தம் எனும் இயக்கியுள்ளார். இயக்குநர் அறிவழகன், தான் இயக்கிய முதல் படமான ஈரம் படத்தின் கதாநாயகன் ஆதியுடன் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார். நாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.

ஆல்பா பிரேம்ஸ் சார்பில் இயக்குனர் அறிவழகன் மற்றும் 7ஜி பிலிம்ஸ் சிவா இணைந்து சப்தம் திரைப்படத்தை தயாரித்துள்ளனர். மேலும், இப்படத்தில் சிம்ரன், லைலா, கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ஹாரர் திரில்லர் கதையாக எடுக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் படம் வெளியாகவுள்ளது.