நடிகை பாவனா தனது 38வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். பாவனாவுக்கு நடிகை மஞ்சு வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மலையாள திரை உலகின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியர் தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான அசுரன் படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார் மஞ்சு வாரியர். அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித்துடன் இணைந்து துணிவு படத்தில் நடித்தார். இந்த ஆண்டு வெளியாக உள்ள விடுதலை 2 மற்றும் ரஜினிகாந்தின் வேட்டையன் உள்ளிட்ட படங்களிலும் மஞ்சு வாரியர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2002 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நம்மல் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாவனா. தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் 2006 ஆம் ஆண்டு அறிமுகமானார். 1986 ஜூன் 6ம் தேதி பிறந்த பாவனா 38 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். நடிகை பாவனா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு நடிகை மஞ்சு வாரியர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகை பாவனாவுக்கு மலையாளத் திரை உலகம் மிகப்பெரிய அளவில் அவருடைய மோசமான காலக் கட்டத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகை பாவனா தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நிலையில், அவருக்கு எதிராக நடத்தப்பட்ட அநீதிகள் காரணமாக முடங்கிய அவரது திரை வாழ்க்கை மற்றும் சொந்த வாழ்க்கை யில் ஏகப்பட்ட சோகங்களை சந்தித்து வந்தார். அதையெல்லாம் உடைத்து எறிந்து தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார் பாவனா. நடிகை பாவனாவின் விவகாரத்தில் நடிகை மஞ்சு வாரியரின் முன்னாள் கணவரான மலையாள நடிகர் திலீப் சிக்கியுள்ள நிலையில், தனது முன்னாள் கணவரை பழிவாங்க சரியான சான்ஸ் கிடைத்தால் மஞ்சு வாரியர் சும்மா விடுவாரா என பாவனாவுக்கு அவர் வாழ்த்து தெரிவித்ததை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
