இயக்குனர் சங்கர் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்!

பிரபல இயக்குனர் சங்கர் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக நேற்று மாலை ஆஜர் ஆனார்.

இயக்குனர் சங்கருக்கு அமலாக்கத்துறை சார்பாக கடந்த சில நாட்களுக்கு முன் சம்மன் அனுப்பப்பட்டது. சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பாக இவருக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இவருக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் இது என்ன வழக்கு என்பது இன்னும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை. என்ன விதமான பண பரிமாற்ற புகார். யார் கொடுத்தது என்பது போன்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. விசாரணை முடிந்த பின்பே முழு விவரங்களை வெளியிடுவோம் என்று அமலாக்கத்துறை தரப்புதெரிவித்துள்ளது .

நேற்று ஆஜரான சங்கரிடம் 3 மணி நேரம் விசாரிக்கப்பட்டது. அவரிடம் இதில் பல கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த விசாரணைக்கு சங்கர் தனது இன்னோவா காரில் வந்து இருந்தார். அமலாக்கத்துறை துணை இயக்குனர் மல்லிகா அர்ஜுனாதான் சங்கரை விசாரித்தார். இந்த விசாரணையின் போது சங்கரின் வழக்கறிஞர் உடன் இருந்தார். அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு சங்கரின் வழக்கறிஞர்தான் அதிகமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த விசாரணை விவரம் தெரிவித்து செய்தியாளர்கள் அங்கே கூடினார்கள். சங்கர் கார் அமலாக்கத்துறை அலுவலக வாசலில் செய்தியாளர்கள் வரிசையாக கூடினார்கள். வெளியே சங்கர் வரும் போது அவரிடம் பேட்டி எடுக்க அவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் சங்கர் இந்த விஷயம் தெரிந்து பின் வாசல் வழியாக வெளியேறினார். அவரின் கார் அங்கேயே இருந்தது. மாறாக சங்கர் சார்பில் வாடகை கார் புக் செய்யப்பட்டது. அந்த கார் பின் பக்க வாசலுக்கு வரவழைக்கப்பட்டது. அங்கிருந்து அவர் வெளியேறிய பின் டிரைவர் சங்கர் காரை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.