ஏகே 61 படத்தில் நடித்து வரும் நடிகை மஞ்சு வாரியர் உடன் நடிகர் அஜித் இமயமலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட போட்டோக்களும், வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.
மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவரும், தமிழில் ‘அசுரன்’ படத்தில் நடித்தவருமான மஞ்சு வாரியர் தற்போது அஜித்தின் 61வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மஞ்சு வாரியர் பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் உள்ளவர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்க ஆர்மபித்த நடிகர் அஜித், அவர் இயக்கத்தில் வலிமை படத்தைத் தொடர்ந்து தற்போது ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வரும் என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. நடிகர் அஜித் மிகப்பெரிய பைக் ரேஸர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால், சமீப காலமாக பைக் தான் அவருடைய உயிராகவே மாறிவிட்டது என்று சொல்லும் அளவுக்கு ஏகப்பட்ட பைக் டூர்கள் செய்து வருகிறார்.
இந்நிலையில், வெளிநாடு சுற்றுலாக்களை முடித்து விட்டு தற்போது இமயமலையில் பைக் ரைடு செய்து வருகிறார். இதுவரை பைக் ரைடு பக்கமே போகாத மஞ்சு வாரியருக்கும் அந்த பேஷனை பழக்கி விட்டு விட்டார் நடிகர் அஜித். லடாக்கில் இருந்து ரோடு வழியாகவே பைக்கில் இமய மலையின் ரொம்பவே ரிஸ்க்கான பாதைகளில் இருவரும் பைக் ரைடு செய்துள்ளனர். அதன் காட்சிகள் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.
போட்டோக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்த ஏகே61 படத்தின் நாயகி மஞ்சு வாரியர், சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித் என நடிகர் அஜித்தை வெகுவாக பாராட்டி உள்ளார். மேலும், இப்படியொரு பைக் சாகச பயணத்தை என் வாழ்நாளில் நான் செய்ததே இல்லை அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த உங்களுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.