பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘லவ் டுடே’ திரைப்படத்தினை ரஜினி பாராட்டியுள்ளார்.
ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘லவ் டுடே’. இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ‘லவ் டுடே’ படத்தை பார்த்து விட்டு நடிகர் ரஜினிகாந்த், பிரதீப் ரங்கநாதனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதீப் ரங்கநாதன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இதற்கு மேல் என்ன கேட்கப்போகிறேன்? சூரியனுக்கு பக்கத்தில் நிற்பது போல இதமாக இருந்தது. இறுக்கமான அணைப்பு, அந்த கண்கள், அந்த சிரிப்பு, அந்த ஸ்டைல் மற்றும் அன்பு. என்ன ஒரு மனிதர். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் என்னுடைய படத்தைப் பார்த்து பாராட்டினார். அவர் கூறிய வார்த்தைகளை எப்போதும் மறக்க மேட்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.