இன்று 73வது பிறந்தநாள் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் ஆன்மீகம் உள்ளிட்ட ரஜினிகாந்தின் கருத்துகளுக்கு பலருக்கு உடன்பாடு இல்லை என்றாலும் ஒரு நடிகராக ரஜினிகாந்தை கொண்டாடதவர்களே இருக்க முடியாது. 80ஸ் கிட்ஸ் தொடங்கி தற்போது 2கே கிட்ஸ்கள் வரை நடிகராக ரஜினிகாந்தை ஏதோ ஒரு வகையில் கண்டிப்பாக பிடித்திருக்க வேண்டும். இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு நேரிலும் சமூக வலைதளங்களில் பல பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “இன்று 73-ஆவது பிறந்தநாள் காணும் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்!” என பதிவிட்டுள்ளார்.
