ஷாருக்கானின் ‘பதான்’ டிரைலர் வெளியிட்ட விஜய்க்கு ஷாருக்கான் நன்றி!

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பதான்’. இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இன்று பதான் படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் “பதான்”. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் “பதான்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், முன்னோட்டம் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து ‘பதான்’ படத்தின் டிரைலர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இன்று பதான் படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஷாருக்கான் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘மிக்க நன்றி நண்பா.. இதனால்தான் நீங்கள் தளபதி. கூடிய விரைவில் ஒரு அருமையான விருந்தில் சந்திப்போம்’ எனத் தெரிவித்துள்ளார்.