சந்திரபாபு நாயுடுவுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!

சந்திரபாபு நாயுடு உடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு நடத்திய நிலையில், இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும் அடுத்து தனது மகள் இயக்கத்தில் நடிக்க உள்ள லால் சலாம் படத்தை முன்னிட்டு அந்த படம் வெற்றிபெற வேண்டி திருப்பதி மற்றும் அமின் தர்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வந்தார். இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த நிலையில், அவருக்கு சால்வை அணிவித்து சந்திரபாபு நாயுடு உற்சாக வரவேற்பு அளித்துள்ள புகைப்படம் வெளியாகி உள்ளது.

நீண்ட நாள் கழித்து நண்பர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தேன்.அவருடைய உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும் என்றும் அரசியல் வாழ்க்கையில் வெற்றிப்பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்தி உள்ளார்.