கேப்டன் மில்லர் மேக்கிங் கிளிம்ப்ஸ்: தனுஷின் மாஸ் லுக்!

ராக்கி, சாணிக் காயிதம் திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். அவர் தற்போது தனுஷ் நடிப்பில் தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லரை இயக்கி வருகிறார்.

ராக்கி, சாணி காயிதம் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் படத்தை இயக்கி வருகிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம் பீரியட் ஜானரில் ஆக்சன் படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. தென்காசி, கேரளா பகுதிகளில் உள்ள காடுகளில் கேப்டன் மில்லர் ஷூட்டிங் நடைபெற்றது. தனுஷ் ஜோடியாக பிரியா பவானி சங்கரும், முக்கியமான பாத்திரங்களில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்து வந்தனர்.

எப்போதும் கேமரா முன்பே பிஸியாக இருக்கும் தனுஷின் நடிப்பில் கடந்தாண்டு மட்டும் 5 படங்கள் வெளியாகின. அத்ரங்கி ரே, தி கிரே மேன், மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் என வெரைட்டியாக கெத்து காட்டிய தனுஷ் அதனைத் தொடர்ந்து வாத்தி படத்திலும் நடித்து முடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் அடுத்த மாதம் ரிலீஸாகவுள்ளது. இன்னொரு பக்கம் கேப்டன் மில்லர் படத்திலும் பிஸியாக நடித்து வந்தார். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி தென்காசி, கேரளா போன்ற வன பகுதிகளில் நடைபெற்று வந்த கேப்டன் மில்லர் ஷூட்டிங், சில வாரங்களுக்கு முன்னர் கனமழை காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. இதனிடையே தான் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் கமிட்டான புதிய படத்தின் பூஜையும் தொடங்கியது.

அதேநேரம் கேப்டன் மில்லர் பிரீயட் திரைப்படமாக உருவாகி வருவதால் பெரும்பாலான காட்சிகள் செட் போட்டு எடுக்கப்படுகிறது. ஆனால் சமீபத்தில் ஒரு முக்கியமான காட்சிக்காக போடப்பட்ட செட் பிரம்மாண்டமாக இல்லை என நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது. தற்போது அந்த வதந்திகளுக்கு படக்குழு முற்றுப் புள்ளி வைத்துள்ளது. கேப்டன் மில்லர் ஷூட்டிங் நிறுத்தப்படவில்லை என்பதை மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோவுடன் அறிவித்துள்ளது படக்குழு. ரெட்ரோ ஸ்டைலில் பீரியட் படத்துக்கு தேவையான பிரம்மாண்டமான செட்டிங் போடப்படுவதை இந்த கிளிம்ப்ஸில் பார்க்க முடிகிறது. அதேபோல் அதிகமான துப்பாக்கிகளும் அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ளன. இறுதியாக கழுத்தில் துண்டை போட்டு கையில் துப்பாக்கியுடன் தனுஷ் நிற்கும் இந்த கிளிம்ப்ஸ் அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. மேலும் கண்டிப்பாக இந்தப் படம் ஆக்‌ஷன் ட்ரீட்டாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.