அரவிந்த் சாமி உடன் நடிகை குஷ்பு எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரல்!

அரவிந்த் சாமி உடன் நடிகை குஷ்பு எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு மை ட்ரீம் என கேப்ஷன் போட்டுள்ளார்.

நடிகை குஷ்பு சமீபத்தில் விஜய்யின் வாரிசு படத்தில் நடித்திருந்தார். ரியாலிட்டி ஷோ, சின்னத்திரை, சினிமா, தயாரிப்பு என படு பிசியாக இயங்கி வருகிறார் குஷ்பு. வாரிசு படத்தில் நடித்து விட்டு நான் நடிக்கவே இல்லையே என குஷ்பு பேட்டி கொடுத்த நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள் அவருடைய போர்ஷன் முழுவதும் எடிட்டிங்கில் தூக்கப்பட்டது தெரிந்து தான் அப்படி பேசி இருக்கிறார் என ட்ரோல் செய்து வந்தனர். விஜய் மற்றும் ராஷ்மிகாவுடன் இணைந்து வாரிசு படத்தில் குஷ்பு எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் எல்லாம் வெளியானது. இசை வெளியீட்டு விழாவிலும் விஜய் குஷ்பு பற்றி பாராட்டி பேசிய நிலையில், படத்தில் கடைசி வரை குஷ்பு எங்க சார் வராங்க என ரசிகர்கள் தேடித் தேடி தேய்ந்து விட்டனர்.

இந்நிலையில், நடிகை குஷ்பு உடன் அரவிந்த் சாமி எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. எப்படி ஒருவரால் இந்த மனுஷனை பார்த்து விட்டு காதலில் விழாமல் இருக்க முடியும் என கேப்ஷன் கொடுத்து ஏகப்பட்ட ஹார்ட்டீன்களையும் நடிகை குஷ்பு பதிவிட்டு அரவிந்த் சாமியுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். பிக் பாஸ் அர்ச்சனா உள்ளிட்ட பிரபலங்கள் எனக்கு கூட அவர் மீது காதல் இருக்குங்க என கமெண்ட் போட்டு வருகின்றனர். ஹார்டீன்களை வெளியிட்டு அரவிந்த் சாமியை பார்த்து காதலிக்காம இருக்க முடியுமா என உருகிய நடிகை குஷ்பு மை ட்ரீம் என்றும் கேப்ஷன் போட குஷ்புவுக்கும் அரவிந்த் சாமி எந்தளவுக்கு பிடிச்சிருக்குன்னு இதிலேயே தெரிகிறது என ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.