உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கண்ணை நம்பாதே’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’. இப்படத்தின் டிரைலரை சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது. இந்நிலையில் கண்ணை நம்பாதே படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ‘ இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் கண்ணை நம்பாதே படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற மார்ச் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக புதிய போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.