ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படப்பிடிப்பு நிறைவு!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் லால் சலாம். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லால் சலாம் படப்பிடிப்பு நிறைவு இந்நிலையில், ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுயடைந்ததாக படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. அதில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்த சூழலில் அவர் முதல் ஷெட்யூலில் கலந்துகொள்ளவில்லை என தெரிகிறது. எனவே விரைவில் தொடங்கவிருக்கும் இரண்டாவது ஷெட்யூலில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு தனது காட்சிகளை நடித்து முடிப்பார் என கூறப்படுகிறது. படமானது இந்த வருடத்துக்குள்ளாகவே வெளியாகிவிடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.