சென்னையில் நாளை மாமன்னன் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

மாமன்னன் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் மாமன்னன் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களுக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்கிற படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். நீண்ட நாள்களாக தயாரிப்பிலிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார்.

மாமன்னன் படத்தின் ஏ.ஆர்.ரகுமான் பாடிய பாடல் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. நாளை(ஜூன்.1) சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் மாமன்னன் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.