இயக்குநர் அட்லி என்னை நம்ப வச்சு ஏமாத்திட்டார்: ப்ரியாமணி

ஜவான் படத்தில் நடித்தபோது அட்லி தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறியிருக்கிறார் ப்ரியாமணி.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ப்ரியாமணி. அந்த படத்தில் நடித்தபோது அட்லி தனக்கு வாக்குறுதி அளித்துவிட்டு பின்னர் ஏமாற்றிவிட்டதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பேட்டியில் ப்ரியாமணி கூறியதாவது, ஜவான் படத்தில் விஜய் கவுரவத் தோற்றத்தில் வருகிறார் என அட்லி என்னிடம் கூறினார். அதை கேட்டவுடன் விஜய்யுடன் எனக்கு சில காட்சிகள் கொடுக்குமாறு கேட்க, அட்லியும் சரி என்று சொன்னார். ஆனால் ஜவான் படத்தில் விஜய் நடிக்கவில்லை. அதை பார்த்து ஏமாற்றம் அடைந்தேன். அட்லி என்னை ஏமாற்றிவிட்டார் என்றார்.

ஜவான் ஹீரோ ஷாருக்கான் பற்றி ப்ரியாமணி கூறியதாவது, நான் அவருக்கு பின்னால் அல்ல அருகில் நின்று ஆட வேண்டும் என டான்ஸ் மாஸ்டர் மற்றும் அட்லியிடம் கூறினார் ஷாருக்கான். சென்னை எக்ஸ்பிரஸில் இருந்து ப்ரியாமணி எனக்கு டான்ஸ் டீச்சராக இருக்கிறார். அதனால் அவர் என் பக்கத்தில் நின்று தான் ஆட வேண்டும் என்று கறாராக கூறினார் என்றார்.