ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் பிரான்ட் தூதராக தீபிகா படுகோன் நியமனம்!

ஹூண்டாய் நிறுவனத்திற்குத் தீபிகா படுகோன்-ஐ பிராண்ட் தூதராகக் நியமித்து மூலம் கூடுதல் பலம் கிடைக்கும் எனத் தெரிகிறது.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தற்போது அதிகப்படியான போட்டி நிலவி வருகிறது, சில வருடங்களுக்கு முன்பு ரேசில் இல்லாத டாடா மோட்டார்ஸ் தற்போது அடுத்தடுத்து புதிய மாடல்களை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. இதேபோல் ஹூண்டாய்-யின் கிளை நிறுவனமான கியா அறிமுகமான சில வருடத்திலேயே பெரும் வர்த்தகப் பங்கீட்டை பிடித்துள்ளது, MG மோட்டார்ஸ் தற்போது JSW உடன் இணைந்தது மூலம் அடுத்த 2 வருடத்தில் புதுப் புது மாடல்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. மேலும் மாருதி சுசூகி டோயோட்டா உடன் இணைந்த ஹைப்பிர்ட் கார்கள், எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யச் செய்து வருகிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் இந்திய திரைப்பட உலகின் முக்கிய நட்சத்திரமான தீபிகா படுகோன்-ஐ தனது பிராண்ட் தூதராகக் நியமித்து, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது ஹூண்டாய் மோட்டார் இந்தியா.

ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் ஸ்டைலுக்கும், விற்பனை சாதனைகளுக்கும், வர்த்தகத்தில் தடம் பதிப்பதில் இலக்கணமாகத் திகழ்கிறது. இந்த நிலையில் இந்நிறுவனத்திற்குத் தீபிகா படுகோன்-ஐ பிராண்ட் தூதராகக் நியமித்து மூலம் கூடுதல் பலம் கிடைக்கும் எனத் தெரிகிறது. பொதுவாகத் தீபிகா படுகோன் ஒரு நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டர் ஒப்பந்தத்திற்கு 9-10 கோடி ரூபாய் அளவிலான தொகையை வசூலிப்பதாகக் கூறப்படும் வேளையில், ஹூண்டாய் போன்ற பெரிய பிராண்டின் தூதராக நியமிக்கப்பட்டு இருக்கும் வேளையில் 12 கோடி ரூபாய் பெற்று இருக்க வாய்ப்புகள் உள்ளது. மேலும் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கார்களின் அறிமுகத்திற்கு, தீபிகாவின் புகழ் பெரிய அளவில் பயன்படும். இதேபோல் இந்தியாவில் பிற நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் குறைக்கவும், புதிய வாடிக்கையாளர் ஈர்க்கும் ஹூண்டாய் முயற்சிக்குத் தீபிகா படுகோனே முகமாகச் செயல்படுவார்.

“உலகளவில் பிரபலமான பாலிவுட் நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன் அவர்களை எங்கள் பிராண்ட் தூதராக இணைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் இளமை மற்றும் டைனாமிக் தன்மையுடன் அவரது புகழ் ஒன்றிணைகிறது. தீபிகாவின் சாதனைப் நடிப்புத் திறன் மூலம் இந்தியா முழுக்கப் பெற்றுள்ள ரசிகர் பட்டாளம் எங்களுடை வர்த்தக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் தருண் கேங் தெரிவித்தார்.