‘வணங்கான்’ படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

சமீபத்தில் ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில் வணங்கான் படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது ‘வணங்கான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, ‘வணங்கான்’ திரைப்படத்தின் டீசர் வருகிற 19-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.