தமிழ் திரைப்படத்தில் முதலில் தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுங்கள் என வனிதா விஜயகுமார் கூறினார்.
தமிழ் சினிமாவிலும் சரி தமிழ் தொலைக்காட்சிகளிலும் சரி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத நபர் என்றால் அதில் கட்டாயம் வனிதா விஜயகுமாரின் பெயர் இருக்கும். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் மூன்றாவது சீசனில் வனிதா விஜயகுமார் போட்டியாளராக பங்கேற்றார். இதற்கு முன்னர் படங்களிலும் நடித்துள்ளார். இவரது அசாத்திய பேச்சுத் திறமையால் மற்ற ஹவுஸ் மேட்டுகளை டாமினேட் செய்து ஒட்டுமொத்த பிக் பாஸ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். ஆனால் அவரது டாமினேஷனால் ஒரு கட்டத்தில் கடுப்பான ரசிகர்கள் எவிக்ஷனில் வனிதா விஜயகுமாரை வெளியேற்ற அதன் பின்னர் பிக் பாஸ் சீசன் 3 கொஞ்சம் சுமாராகவே போனது. இதனால் எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு அந்த சீசனில் மீண்டும் வனிதா விஜயகுமார் ரீஎண்ட்ரி கொடுத்தார். வனிதா விஜயகுமார் மீண்டும் பிக் பாஸ் 3 சீசனுக்குள் வந்த பின்னர் அந்த சீசனின் டி.ஆர்.பி பழையபடி எகிற தொடங்கியது. பிக் பாஸ் சீசன் 3 இன் ஒரு வில்லி கதாபாத்திரமாகவே வனிதா விஜயகுமார் வளம் வந்தார். வனிதா விஜயகுமார் பிக் பாஸ் மூன்று சீசன் மூலம் தன்னை ஒரு சர்ச்சையில் முழு உருவமாகவே அவர் மாற்றிக் கொண்டார். அதன் பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை வனிதா விஜயகுமார் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் மிக விரைவில் பிரிவில் முடிந்தது. இந்நிலையில் வனிதா விஜயகுமார் தற்போது தனது மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் வனிதா விஜயகுமார் மற்றும் சோனியா அகர்வால் நடித்த தண்டுபாளையம் திரைப்படம் நாளை அதாவது ஜூன் ஏழாம் தேதி வெளியாக உள்ள நிலையில் அந்தப் படத்திற்கான புரொமோஷன் வனிதா விஜயகுமார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் அவரிடம் தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் அதிகமாக பெயர் வைப்பது இல்லையே என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தமிழ் திரைப்படத்தில் முதலில் தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுங்கள் என வனிதா விஜயகுமார் பதில் அளித்தார்.
மீண்டும் செய்தியாளர் தரப்பிலிருந்து அண்மையில் வெளியான விஜய் திரைப்படங்களுக்கு கூட பீஸ்ட், லியோ என்ற பெயர்களும் அடுத்து வெளியாகியுள்ள படத்துக்கு தி கோட் எனவும் ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வனிதா விஜயகுமார், விஜய் முதலில் தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்கச் சொல்லுங்கள், அதன் பின்னால் அவரது படங்களுக்கு தமிழில் பெயர் வைப்பது பற்றி பேசலாம். அவர் எனக்கே வாய்ப்பு கொடுக்கவில்லை என வனிதா விஜயகுமார் கடுப்பாக பதில் அளித்தார்.
