நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம் இன்று நடைபெற்றது!

நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம் இன்று நடைபெற்றதாக நாகார்ஜுனா சோஷியல் மீடியாவில் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்துக் கொள்ள போகின்றனர். நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா அப்பாவை போலவே 2வது திருமணம் செய்துக் கொள்ள தயாராகி விட்டாரா என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வந்த நிலையில், நாகார்ஜுனாவே அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவின் இல்லத்தில் இன்று காலை 9.42 மணிக்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், இரு வீட்டார் சந்திப்பு மட்டும் தான் என்றும் நிச்சயதார்த்தம் நடைபெறவில்லை என்றும் தகவல்கள் வெளியான நிலையில், ஆகஸ்ட் 8ம் தேதி 2024ம் ஆண்டு நாக சைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

சமந்தாவுடன் வாழ்க்கை நடத்தி வந்த போதே சோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யா டேட்டிங் சென்று வந்தார் என சர்ச்சைகள் வெடித்தன. இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்த நிலையில், சில போட்டோ ஆதாரங்களுடன் சோஷியல் மீடியாவில் பல விஷயங்கள் பூகம்பங்களாக கிளம்பின. இந்நிலையில், இருவரும் இதுவரை காத்து வைத்திருந்த ரகசியம் தற்போது அம்பலமாகி விட்டது. நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ள போகும் நடிகர் நாக சைதன்யாவை அவரது ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்தி வருகின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.