ரஷ்யாவில் உள்ள மெக்டோனல்ட்சின் 850 உணவகங்கள் உள்ளூர் நிறுவனத்திற்கு விற்கப்படுகிறது.
கம்யூனிச நாடுகளின் கூட்டமைப்பான சோவியத் ஒன்றியம் 1990-களில் பிரிந்தபோது ரஷ்யாவிற்கு மெக்டோனல்ட்ஸ் உணவகம் வந்தது. இது அமெரிக்க முதலாளித்துவத்தின் அடையாளம் என பேசப்பட்டது. 1990-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி மத்திய மாஸ்கோவில் புஷ்கின் சதுக்கத்தில் இந்த உணவகம் தொடங்கப்பட்டபோது இதில் விற்கப்படும் பிக் மேக் என்ற பர்க்கரை வாங்குவதற்கு 30,000 பேர் கூடியிருந்தனர்.
30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த இந்த மெக்டோனால்ட்ஸ் உணவகங்கள் தற்போது ரஷ்யாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மெக்டோனல்ட்ஸ் ரஷ்யாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. ரஷ்யாவில் உள்ள மெக்டோனல்ட்சின் 850 உணவகங்கள் உள்ளூர் நிறுவனத்திற்கு விற்கப்படுகிறது. மீதமுள்ள உணவகங்கள் என்ன ஆகும் என்று தெரியவில்லை.
இந்நிலையில் மூடப்படவுள்ள மெக்டோனல்ட்ஸ் உணவகத்தில் விற்கப்படும் பிக் மேக் பக்கரை வாங்க ஏராளமானோர் வரிசையில் காத்துள்ளனர். இதுகுறித்து ரஷ்ய மக்கள் கூறும்போது, சிலர் 250 கிலோ மீட்டர் பயணம் செய்து வந்து பிக் மேக் பர்க்கரை வாங்குவதாக தெரிவித்துள்ளனர்.
உக்ரைனுக்கு எதிரான போரில் மரியுபோல் நகரத்தை ரஷ்யா கைப்பற்றியது. இதையடுத்து உக்ரைன் வீரர்கள் அந்நகரில் உள்ள உருக்கு ஆலையில் தஞ்சம் அடைந்தனர். இவர்களை மீட்கும் நடவடிக்கையில் உக்ரைன் ஈடுபட்டு வரும் நிலையில், 256 வீரர்கள் சரணடைந்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதில் 51 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் ரஷ்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.