ரஷ்யா அதிபர் புதினுக்கு கனடாவில் நுழைய தடை!

ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த சுமார் 1,000 பேர் தங்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்யும் மசோதாவை கனடா அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது.

ரஷ்யா அதிபர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உக்ரைன் வழியாக நுழைய கனடா தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு பொது பாதுகாப்பு துறை மந்திரி மார்கோ மென்டிசினோ கூறியதாவது:-

உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தொடர் தாக்குதலுக்கு பிறகு ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அவரது அரசு மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த 1,000 பேர் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், “புதின் ஆட்சியின் நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் முக்கிய ஆதரவாளர்கள் எங்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்வது ரஷ்யாவை அதன் குற்றங்களுக்குப் பொறுப்பேற்கும் பல வழிகளில் ஒன்றாக இருக்கும்” என்று மார்கோ மென்டிசினோ தெரிவித்தார்.

இந்நிலையில் ரஷ்யாவின் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்த தற்போது புதிய சார்லி சாப்ளின் தேவை. சினிமா எப்போதும் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் விளாடிமர் ஜெலென்ஸ்கி
கூறினார்.

பிரான்சில் 75வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் உக்ரைன் அதிபர் விளாடிமர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்றினார். அதில் அவா் கூறியதாவது:-

ரஷ்யாவின் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்த தற்போது புதிய சார்லி சாப்ளின் தேவை. சினிமா எப்போதும் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும். இன்றும் சினிமா ஊமையாக இல்லை என்பதை நிரூபிக்க புதிய சாப்ளின் தேவை என்றாா். ஜெலென்ஸ்கியின் இந்த பேச்சுக்கு பலத்த கரவொலி எழுப்பினா். கடந்த 1940-ம் ஆண்டில் வெளியான தி கிரேட் டிக்டேட்டர் என்ற திரைப்படத்தில் ஹிட்லர் குறித்து சார்லி சாப்ளினின் பேசும் வசனத்தை மேற்கோள் காட்டி பேசினாா்.

இந்த திரைப்பட விழாவில்,”மரியூபோலிஸ் 2″ என்ற ஆவணப்படம் சிறப்புத் திரையிடப்பட உள்ளது. கடந்த மாதம் உக்ரைனில் ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் லிதுவேனியன் திரைப்படத் தயாரிப்பாளரான மந்தாஸ் குவேடராவிசியஸ் என்பவரால் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டது.