ஆஸ்திரேலியா புதிய பிரதமராக அந்தோனி ஆல்பேன்ஸ் தேர்வு செய்யப்பட உள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்தார்.
ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 151 இடங்களுக்கான தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை நடந்தது. ஆட்சி அமைக்க 76 இடங்கள் தேவை என்ற நிலையில், நேற்று மாலையிலேயே எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 72 இடங்களை கைப்பற்றியது. ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி தலைவரும், பிரதமருமான ஸ்காட் மோரீசன் தோல்வியை ஒப்புக் கொண்டார். தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோனி ஆல்பேன்ஸ், ஆஸ்திரேலிய பிரதமராக விரைவில் பொறுப்பேற்கிறார். ஆஸ்திரேலிய பிரதமராக பதியேற்க உள்ள அந்தோனி ஆல்பேன்ஸூக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.