இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானி அபிலாஷா பராக்!

நம் ராணுவ விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக கேப்டன் அபிலாஷா பராக் பயிற்சியை வெற்றி கரமாக முடித்து நேற்று பொறுப்பேற்றார்.

பிரிட்டன் ராணுவத்தின் ராயல் விமானப் படை, நம் நாட்டில் ராணுவ விமானப் பிரிவை 1942ல் துவங்கியது.
இதன் முதல் விமானம் 1947ல் இயங்க துவங்கியது. நம் ராணுவத்துக்கான பிரத்யேக விமானப் படை 1986ல் துவக்கப்பட்டது. இதில், போர் விமானியாக பெண்கள் இருந்ததில்லை. இந்நிலையில், நம் ராணுவ விமான படையில் முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பராக் நேற்று பொறுப்பேற்றார். பயிற்சி முடித்த 36 ராணுவ விமானிகளுடன் அபிலாஷாவும் நேற்று பொறுப்பேற்றார்.

இது குறித்து ராணுவ அமைச்சகத்தின் தகவல் தொடர்பு கூடுதல் இயக்குனர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இந்த நாள், இந்திய ராணுவ விமானப் படையின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். ராணுவ விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக, கேப்டன் அபிலாஷா பராக் வெற்றிகரமாக பயிற்சி முடித்து பொறுப்பேற்றுள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாசிக்கில் உள்ள விமானப் படை பயிற்சி மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 36 விமானப் படை விமானிகளுடன் அபிலாஷா பாரக்கிற்கு விமானி பட்டம் வழங்கப்பட்டது. இதன்மூலம் இந்தியாவின் போா் விமானத்தின் பெண் விமானி என்ற பெருமையை அபிலாஷா பாரக் பெற்றுள்ளாா். ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த அபிலாஷா பாரக், கடந்த 2018, செப்டம்பா் மாதம் விமானப் படையில் சோ்ந்தாா். இவா், ஓய்வு பெற்ற விமானப் படை அதிகாரி கா்னல் எஸ். ஓம் சிங்கின் மகள் ஆவாா்.