ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மீது இணையவழி தாக்குதல்!

ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனத்தின் கணினி அமைப்புகள் மீது நடத்தப்பட்ட ‘ரான்சம்வோ்’ இணையவழி தாக்குதலால், அந்த நிறுவனத்தின் விமான சேவை பாதிக்கப்பட்டது.

இதுதொடா்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஸ்பெஸ்ஜெட் நிறுவனத்தின் சில கணினி அமைப்புகள் மீது செவ்வாய்க்கிழமை இரவு ரான்சம்வோ் இணையவழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பல விமானங்கள் புதன்கிழமை தாமதமாகப் புறப்பட்டன. இரவு சேவையில் கட்டுப்பாடுகள் உள்ள விமான நிலையங்களுக்குச் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பக் குழு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து பிரச்னையை சரிசெய்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.