இஸ்லாமாபாதில் 144 தடை உத்தரவு அமல்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக வதந்தி பரவியதை அடுத்து, இஸ்லாமாபாதில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பார்லிமென்டில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவி இழந்தார். புதிய பிரதமராக, பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் பிரிவை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்றார். இந்நிலையில், இம்ரான் கானை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் எச்சரித்துள்ளதாக, பாக்., முன்னாள் அமைச்சர் பவாத் சவுத்ரி தெரிவித்தார். இதையடுத்து இம்ரானின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ”இம்ரானுக்கு ஏதாவது நேர்ந்தால், அது பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலாகவே கருதப்படும். விளைவுகள் விபரீதமாக இருக்கும்,” என, இமfரானின் உறவினர் ஹஸான் நியாசி எச்சரித்தார்.

இந்நிலையில் இஸ்லாமாபாதின் பானி காலா பகுதியில உள்ள வீட்டுக்கு இம்ரான் கான் நேற்று வருவதாக கூறப்பட்டது. இதையடுத்து இஸ்லாமாபாத் முழுதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இம்ரான் வீட்டைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இஸ்லாமாபாத்தில் ஏற்கனவே 144 தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இம்ரான் கானைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நாடு முழுவதும் வதந்திகள் பரவிவருகின்றன. இந்நிலையில் நேற்றிரவு இஸ்லாமாபாத் காவல்துறை வெளியிட்ட பதிவில், ‘பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) தலைவர் இம்ரான் கான் இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள பானி காலா என்ற குடியிருப்பு பகுதிக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு ஜாமீன் முடிந்ததும் இம்ரான் கான் கைது செய்யப்படுவார் என அந்நாட்டு உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் ஆளும் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இந்த போராட்டங்களின்போது வன்முறையை தூண்டியதாக அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் ஜாமீன் கோரி பெஷாவர் உயர் நீதிமன்றத்தில் இம்ராகான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த தலைமை நீதிபதி குவாசிர் ரஷித், 3 வார காலங்கள் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். வரும் 25-ம் தேதி வரை இம்ரான்கானை கைது செய்யக்கூடாது என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து பெஷாவரில் இருந்து இஸ்லாமாபாத் திரும்ப இம்ரான்கான் முடிவு செய்துள்ள நிலையில், இடைக்கால ஜாமீன் காலம் முடிந்ததும், இம்ரான்கான் கைது செய்யப்படுவார் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளார். இம்ரான்கானை இஸ்லாமாபாத்திற்கு வரவேற்கிறோம் என்று கூறியுள்ள ராணா, அவருக்கு சட்டப்படி பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.