டுவிட்டரை டெல்ஸா அமைப்பின் தலைமை செயலதிகாரி எலான் மஸ்க் 4,400 கோடி டாலரில் (சுமாா் ரூ.3.44 லட்சம் கோடி) கையகப்படுத்துவதற்கு அந்த ஊடக நிறுவனத்தின் இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னதாக, டுவிட்டா் பணியாளா்களுடன் காணொலி மூலம் கடந்த வாரம் பேசிய எலான் மஸ்க், ட்விட்டரைக் கையகப்படுத்தும் எண்ணத்தைக் கைவிடவில்லை எனவும், அதற்குத் தடையாக பல பிரச்னைகள் இருப்பதாகவும் கூறினாா். அந்தப் பிரச்னைகளில் ஒன்றாக, தனது கையகப்படுத்தல் திட்டத்துக்கு டுவிட்டா் நிறுவனத்தின் இயக்குநா் குழு ஒப்புதல் அளிக்காததையும் மஸ்க் குறிப்பிட்டாா். இந்தச் சூழலில், இயக்குநா் குழு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.