இந்தியாவுக்கு, அக்டோபர் 30 முதல் மீண்டும் முழு விமான சேவை அமலுக்கு வர உள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், கொரோனா கட்டுப்பாடு காரணமாக இரண்டு ஆண்டுகளாக சர்வதேச விமான சேவை பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் பயணியர் விமான சேவை அதிகரித்துள்ளது. இது குறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்தியாவுக்கு அக்டோபர் 30 முதல் மீண்டும் முழு அளவிலான பயணியர் விமான சேவை மேற்கொள்ளப்படும். தற்போது சென்னைக்கு வாரத்தில், 10 முறை மேற்கொள்ளப்பட்டு வரும் பயணியர் விமான சேவை அக்டோபர் முதல், 17 ஆக அதிகரிக்கப்படும். கொச்சிக்கு பயணியர் விமான சேவை, 7ல் இருந்து 14 ஆக உயர்த்தப்படும். கொரோனாவுக்கு முன் இயங்கியது போல, அக்டோபர் முதல் இந்தியாவுக்கு முழு வீச்சில் பயணியர் விமான சேவை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
