நைஜீரிய சிறையிலிருந்து 600 கைதிகள் தப்பியோட்டம்!

நைஜீரிய தலைநகா் அபுஜாவிலுள்ள சிறைச் சாலை மீது மத பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், அங்கிருந்த 600 கைதிகள் தப்பியோடினா்.

நைஜீரியா தலைநகர் அபுஜாவில் குஜே என்ற ஜெயில் உள்ளது. இந்த ஜெயில் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுமார் 600 கைதிகள் ஜெயிலில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களில் 300 கைதிகளை போலீசார் பிடித்துள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் போலீஸ் ஓருவர் உயிரிழந்தாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.