டி.ஆர்.டி.ஒ. தலைவராக சமீர் வி. காமத் நியமனம்!

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன தலைவராக சமீர் வி. காமத் நியமனம் செய்யப்பட்டார்.

டி.ஆர்.டி.ஓ. எனப்படும் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும், மேம்பாட்டு நிறுவனம் முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி செயல்படுத்தி வருகிறது. அதிநவீன ஆயுதங்களை உள்நாட்டில் உருவாக்குவது தொடர்பான திட்டங்கள் குறித்தும் ஆராய்ந்து வருகிறது.

இந்நிலையில் இந்நிறுவனத்தின் செயலர் மற்றும் தலைவராக இருந்த சத்தீஷ் ரெட்டி, மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அறிவியல் ஆலோசகாரக நியமிக்கப்பட்டார். இதையடுத்து டி.ஆர்.டி.ஓ. புதிய தலைவராக மூத்த விஞ்ஞானியான சமீர் வி.காமத் நியமிக்கப்பட்டார். இவர் டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்தின் செயலராகவும் இப்பதவியில் இருப்பார்.