அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு செல்லும் 26 விமானங்களின் சேவையை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பை காரணம் காட்டி அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், யூனைடெட் ஏர்லைன்ஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்களின் 26 விமான சேவைகளை சீனா ரத்து செய்திருந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு செல்லும் 26 விமானங்களின் சேவையை அமெரிக்க அரசு தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. இதன்படி ஷியாமென், ஏர் சீனா, சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் மற்றும் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஆகிய 26 விமானங்களின் சேவையை செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 28ஆம் தேதி வரை கொரோனா காரணமாக அமெரிக்க தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து 19 விமானங்களின் சேவையும், நியூயார்க்கில் இருந்து 7 சீனா கிழக்கு விமானங்களின் சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பொறுப்பற்ற செயல் என்று வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் இருந்து புறப்படும் போது கொரானா தொற்று இல்லாத பயணிகளுக்கும் சீனா சென்றபிறகு தொற்று உறுதி செய்யப்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.