ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதால், முழுமையான சுதந்திரம் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என, காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் கூறினார்.
கோவை விமான நிலையத்தில், நிருபர்களிடம் கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:-
குலாம் நபி ஆசாத் உட்பட, கட்சியை விட்டு எந்த ஒரு தொண்டன் சென்றாலும், அது பின்னடைவு தான். காமராஜர் போல ஒருவர் தோன்றினால் தான், காமராஜர் ஆட்சி அமைய முடியும். இந்தியாவில் ஹிந்தி, ஹிந்துத்துவா கொள்கை கொஞ்சம் வேரூன்றி இருக்கின்றன. ஹிந்துத்துவா கொள்கைகளை எதிர்த்து, நாங்கள் வைக்கும் வாதம் இப்போதைக்கு எடுபடவில்லை; எதிர்கட்சிகள் ஒரே அணியில் இல்லை. தமிழகத்தில் ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்துள்ளதால், முழுமையான சுதந்திரம் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது. கடந்த ஓராண்டு ஆட்சியில், முதல்வரின் செயல்பாடுகளை பொறுத்தவரை, மிகவும் சுறுசுறுப்பாகவும், வெளிப்படையாகவும், மக்கள் எளிதில் அணுக கூடியவராகவும் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.