‘கவர்னர் நியமனத்தில் தேர்தல் முறை அவசியம்’ என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
‘பல்கலைகளில் துணை வேந்தரை நியமிப்பது, மாநில அரசின் உரிமை’ என, முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியிருப்பது, வரவேற்கத்தக்கது. இதுகுறித்து, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க மறுத்து, அரசிடம் விளக்கம் கேட்டுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைக்கு மதிப்பளித்து, விரைவில் சட்ட திருத்தத்திற்கு கவர்னர் ஒப்புதல் தர வேண்டும். ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பது போல், கவர்னர் விஷயத்திலும், தேர்தல் முறை பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.