குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்ற, ஒரே வாரத்தில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் லட்சுமண்குடி கிராமத்தை சேர்ந்த முத்துகுமரன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் லட்சுமண்குடி கிராமத்தை சேர்ந்த்வர் முத்து குமரன். இவர் பி.பார்ம் பட்டப்படிப்பை முடித்து உள்ளார். இவருக்கு வித்யா மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இவர் காய்கறி கடை நடத்தி வந்தார். இவருக்கு காய்கறி கடையில் போதிய வருமானமின்றி, 2 மகள்களும் படிக்க வைப்பதற்கு கஷ்டப்பட்டு வந்தார். இதையடுத்து வெளிநாடு சென்று பணிபுரிவதற்கு அவர் முடிவு செய்தார். வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்பும் ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர் மூலம் குவைத்துக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. குவைத்துக்கு செல்வதற்காக ஒருவரிடம் முத்துகுமரன் 1.5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். கடந்த 3-ந் தேதி அவர் ஐதராபாத் நிறுவனம் மூலம் குவைத்துக்கு சென்றார். 4, 5, 6-ந் தேதிகளில் அவர் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் தனக்கு குவைத் வேலை பிடிக்கவில்லை என வருத்தமடைந்து மனைவியிடம் பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முத்துகுமரன் குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் 7-ந்தேதி முதல் அவரது தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவருடன் பேச முடியாமல் அவரது மனைவி தவித்தபடி இருந்தார். இதற்கிடையே கடந்த 9-ந் தேதி குவைத்தில் முத்துகுமரன் மரணமடைந்து விட்டதாக இடிபோன்ற ஒரு செய்தி வித்யாவுக்கு வந்தது. இதனால் வித்யாவும், அவரது குடும்பத்தினரும் கணவர் முத்துகுமரன் எப்படி மரணமடைந்தார். என்ன நடந்தது? என்பது தெரியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வறுமை காரணமாக, குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்ற, ஒரே வாரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் லட்சுமண்குடி கிராமத்தை சேர்ந்த முத்து குமரன் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.